தமிழ் சினிமாவில் பிரபலமான நடிகராக இருக்கும் சிம்பு தற்போது ஒபலி கிருஷ்ணா இயக்கத்தில் பத்து தல என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தில் கௌதம் கார்த்திக் மற்றும் பிரியா பவானி சங்கர் போன்றோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ள நிலையில் கடந்த 30-ஆம் தேதி படம் திரையரங்குகளில் ரிலீஸ் ஆகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

பத்துதல திரைப்படத்திற்கு தொடர்ந்து பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வரும் நிலையில் தற்போது படத்தின் அதிகாரப்பூர்வ வசூல் விவரத்தை படக்குழு  வெளியிட்டுள்ளது. அதன்படி பத்துதல திரைப்படம் முதல் நாளில் மட்டும் 12.3 கோடி ரூபாய் வசூல் சாதனை புரிந்துள்ளது. மேலும் நடிகர் சிம்புவின் கேரியரில் முதல் நாளில் இவ்வளவு அதிகமாக வசூல் சாதனை புரிந்த முதல் திரைப்படம் பத்து தல தான் என்றும் கூறப்படுகிறது. இதனை தற்போது சிம்பு ரசிகர்கள் கொண்டாடி வருகிறார்கள்.