தமிழ் சினிமாவில் கடந்த 40 வருடங்களாக சூப்பர் ஸ்டாராக கொடி கட்டி பறப்பவர் ரஜினிகாந்த். இவர் தற்போது நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, சிவராஜ்குமார், மோகன்லால் போன்ற பல பிரபலங்கள் முக்கிய வேடத்தில் நடிக்கிறார்கள். இந்த படத்தின் சூட்டிங் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் லால்சலாம் திரைப்படத்திலும் ரஜினி முக்கிய வேடத்தில் நடிக்க இருக்கிறார். இதைத்தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் 171-வது திரைப்படத்தை நடிகர் சூர்யாவின் ஜெய் பீம் படத்தை இயக்கிய ஞானவேல் இயக்குகிறார்.

இந்நிலையில் ரஜினியின் இரண்டாவது மகள் சௌந்தர்யாவுடன் மும்பையில் அவர் எடுத்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. நீட்டா அம்பானியின் கலாச்சார மைய திறப்பு விழாவில் கலந்து கொள்வதற்காக ரஜினி மும்பைக்கு சென்றுள்ளார். அப்போது ரஜினி மற்றும் சௌந்தர்யா சேர்ந்து எடுத்த புகைப்படங்களை சௌந்தர்யா தன் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளதோடு, புது லுக் செம தலைவா என்று பதிவிட்டுள்ளார். மேலும் இந்த புகைப்படம் தற்போது ரசிகர்கள் மத்தியில் வைரல் ஆகி வரும் நிலையில் ரஜினியின் அடுத்த படம் லுக்காக இருக்கலாம் என்று கூறி வருகிறார்கள்.