மதுரை மாவட்டத்திலுள்ள திருநகர் நெசவாளர் காலணியில் ஏராளமான தெருநாய்கள் சுற்றி திரிகிறது. நேற்று மாலை பிள்ளையார்கோவில், எல்.கே.துளசிராம் ஆகிய தெருக்களில் சுற்றி திரிந்த வெறிநாய் பொதுமக்களை ஓட ஓட விரட்டி கடித்தது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் சாவித்திரி, ஆனந்தி, காயத்ரி, தேவிப்பிரியா, கார்த்திக் உட்பட 10 பேர் காயமடைந்தனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் வெறி நாயை விரட்டியடித்தனர்.
இதனையடுத்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து அறிந்த அதிகாரிகள் தெரு நாய்களின் எண்ணிக்கையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்.