
நாமக்கல் மாவட்டத்தில் நெ.3 கொமாரபாளையம் என்ற பகுதி உள்ளது. இங்கு கூலி தொழிலாளியான பழனிவேல் (46) என்பவர் வசித்து வந்துள்ளார். இவருக்கு திருமணமாகி செல்வி (36) என்ற மனைவியும், ஒரு மகனும் இருக்கிறார்கள். இதில் பழனிச்சாமி கடந்த 2-ம் தேதி கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக மீட்க்கப்பட்டார். அவருடைய உடல் ஆயிபாளையம் ரயில் தண்டவாளம் அருகே கிடைத்தது. இது தொடர்பாக வெண்ணத்தூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தியதில் செல்வி மீது அவர்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இதனையடுத்து அவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் தெரிய வந்துள்ளது. அதாவது அந்தப் பகுதியின் ஊராட்சி மன்ற தலைவர் கந்தசாமியும் (49) பழனிச்சாமியும் நெருங்கிய நண்பர்கள். இவர்கள் கடந்த 10 வருடங்களாக நட்புடன் பழகி வந்த நிலையில் அடிக்கடி கந்தசாமி பழனிசாமி வீட்டிற்கு சென்றுள்ளார். அப்போது கந்தசாமிக்கும், செல்விக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறிய நிலையில் அடிக்கடி தனிமையில் சந்தித்து இருவரும் உல்லாசமாக இருந்துள்ளனர்.
இது குறித்து பழனிசாமிக்கு தெரிய வரவே அவர் தன் மனைவியிடம் தகராறு செய்துள்ளார். அந்த சமயத்தில் ரவி என்பவருடன் பழனிசாமிக்கு நட்பு ஏற்பட்டுள்ளது. இதனை தங்களுக்கு சாதகமாக செல்வி பயன்படுத்தி கொண்டார். அதன்பிறகு சேலத்தைச் சேர்ந்த கூலிப்படை ரவி பழனிசாமியை தனியாக அழைத்துச் சென்று மது வாங்கி கொடுத்துள்ளார். அதன்பிறகு அவரை கந்தசாமியும், ரவியும் சேர்ந்து கத்தியால் கொடூரமாக கொத்திக் கொலை செய்துள்ளனர். தன்னுடைய கள்ளக்காதலை தொடர்வதற்காக தன் கணவரை செல்வியே கொலை செய்யுமாறு கூறியுள்ளார் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் செல்வியை கைது செய்த காவல்துறையினர் கந்தசாமியை வலைவீசி தேடி வருகிறார்கள்.