பொள்ளாச்சியில் நடைபெற்ற ‘வி தி லீடர்ஸ்’ மாநாட்டில் ஒட்டுமொத்த தமிழகத்தையே உலுக்கும் வகையிலான அதிரடி சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. மாநாட்டு மேடையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையுடன் நின்றிருந்த கிரீஷ் என்ற மாணவர் திடீரென மேடையிலேயே கதறி அழுதுள்ளார். இதைக் கண்டு பதறிப்போன அண்ணாமலை, உடனடியாக மேடையை விட்டு இறங்கியதும் அந்தத் தம்பியைத் தனியாக அழைத்து என்ன நடந்தது என்று விசாரித்துள்ளார். அப்போது அந்த மாணவன் சொன்ன ரகசியத்தைக் கேட்டு அங்கிருந்த ஒட்டுமொத்தக் கூட்டமும் அப்படியே உறைந்துபோய் நின்றது.

​பொள்ளாச்சி மாநாட்டு மேடைக்கு வருவதற்கு வெறும் 10 நிமிடங்களுக்கு முன்புதான் தன் தந்தை இறந்துவிட்ட செய்தி அந்த மாணவனுக்குக் கிடைத்துள்ளது. ஆனாலும், தன் தந்தையும் ஒரு குடிநோயாளி என்பதால், தன்னைப்போல வேறு எந்தக் குடும்பமும் அழக்கூடாது, இந்தச் சமுதாயமாவது போதையில் இருந்து மீள வேண்டும் என்ற ஒற்றை நோக்கில், தன் அத்தோடு துயரத்தையும் நெஞ்சுக்குள் மறைத்துக்கொண்டு அந்தத் தம்பி மாநாட்டில் பங்கேற்றுள்ளார்.

இந்தச் சம்பவத்தைக் குறிப்பிட்டு உணர்ச்சிப்பொங்கப் பேசிய அண்ணாமலை, தன் துயரமான நேரத்திலும் சமுதாயத்திற்காக நின்ற இந்தத் தம்பி கிரீஷ் அல்லவா உண்மையான தலைவன் எனக் கண்ணீர் மல்கக் பாராட்டியதோடு, அவன் தமிழக மக்களுக்குப் பணியாற்ற வலிமையான தலைவராக வளர வேண்டும் என இறைவனை வேண்டுவதாகவும் உருகியுள்ளார்.