அமெரிக்காவில் மாயமான பயணிகள் விமானம் கடலில் விழுந்து நொறுங்கியது. இதனால் 10 பேர் உடல் சிதறி பலியாகி உள்ளனர். கடந்த 6-ஆம் தேதி அலாஸ்காவிலிருந்து ஒரு விமானம் ரோம் நகருக்கு புறப்பட்டு சென்றது. இந்த நிலையில் விமானம் புறப்பட்ட 39 நிமிடங்களில் ரேடார் தொடர்பை இழந்தது.

மாயமான அந்த விமானம் ரோம் நகரில் இருந்து 55 கிலோ மீட்டர் தொலைவில் கடல் பகுதியில் பனிப்பாறையில் நொறுங்கி விழுந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 நாட்களில் அமெரிக்காவில் நிகழும் மூன்றாவது விமான விபத்து இதுவாகும்.