
ரஷ்யா நாட்டின் அதிபரான புதின், ஐரோப்பாவின் நோட்டோ நாடுகளுடன் தனது அண்டை நாடான உக்ரைன் இணைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் ரஷ்யா மீது கடந்த 2022 பிப்ரவரி முதல் போர் நடைபெற்று வருகிறது. 2 பக்கங்களிலும் உயிர் சேதங்களும், மக்கள் இடப்பெயர்வும் அதிகரித்துள்ளது. உக்ரைனுக்கு ஆதரவாக அமெரிக்கா உள்ளிட்ட மேற்கு நாடுகளும், ரஷ்யாவுக்கு ஆதரவாக வடகொரியாவும் உதவி செய்து வருகின்றது. இந்நிலையில் ரஷ்யாவின் இசை கலைஞரும், வானொலி தொகுப்பாளருமான வாடிம் ஸ்ட்ரோய்கின்(58) செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 10-வது மாடியில் வசித்து வந்துள்ளார்.
இவர் கடந்த புதன்கிழமை அன்று வீட்டில் தண்ணீர் எடுப்பதற்காக சமையல் அறைக்கு சென்றதாகவும், பின்னர் ஜன்னலை திறந்து கீழே குதித்ததாகவும் கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்து வந்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். முன்னதாக இவர் புதின் மற்றும் உக்ரைன் போரை விமர்சித்து சமூக ஊடகங்களில் பதிவிட்டுள்ளார். அதாவது கடந்த 2022ல் தனது சமூக வலைதள பக்கத்தில் இந்த முட்டாள் (புதின்) தனது சொந்த மக்கள் மீதும், சகோதரர் தேசத்தின் மீதும் போரை அறிவித்தார் என்று பதிவிட்டிருந்தார்.