வடகொரியாவின் கடுமையான சட்டங்கள் மற்றும் கண்காணிப்புகளுக்கு மத்தியில், கிம் குடும்பத்தினர் அங்கிருந்து தப்பிக்க சுமார் 10 ஆண்டுகள் ரகசியமாகத் திட்டமிட்டனர். இந்த ஆபத்தான பயணத்தில் ஒரு கர்ப்பிணிப் பெண் மற்றும் முதியவர்கள் உட்பட மொத்தம் 8 பேர் இடம்பெற்றிருந்தனர்.
மேலும் வெறும் இரண்டு மணி நேரப் போராட்டமாகத் தெரிந்தாலும், கடலில் சிறிய மீன்பிடிப் படகு மூலம் அவர்கள் மேற்கொண்ட பயணம் மரணத்தின் விளிம்பில் நின்றதைப் போன்ற ஒரு த்ரில்லர் அனுபவமாகும். வடகொரியக் கடற்படையின் பார்வையில் படாமல் இருக்க, மிகத் துல்லியமான நேரத்தைக் கணித்து, அலைகளின் வேகத்தையும் காலநிலையையும் சாதகமாகப் பயன்படுத்தி அவர்கள் தென்கொரிய எல்லையை நோக்கித் தப்பினர்.
இந்தத் துணிச்சலான தப்பித்தல் முயற்சிக்குக் பின்னால் பல ஆண்டுகால உழைப்பும், உயிரைப் பணையம் வைத்த துணிச்சலும் ஒளிந்துள்ளன. அந்தப் படகில் இருந்த ஒவ்வொரு நிமிடமும் அவர்கள் பிடிபட்டால் மரண தண்டனை உறுதி என்ற அச்சம் இருந்தபோதிலும், பிறக்கப்போகும் குழந்தைக்கும் தன் குடும்பத்திற்கும் ஒரு சுதந்திரமான வாழ்வு கிடைக்க வேண்டும் என்ற உறுதியே அவர்களை வழிநடத்தியது.
இந்நிலையில் தென்கொரியக் கடற்படையினரால் அவர்கள் மீட்கப்பட்டபோது, பல தசாப்த கால அடக்குமுறையிலிருந்து விடுபட்டு, அவர்கள் ஒரு புதிய வாழ்க்கையைத் தொடங்கினர். ஒரு சாதாரண குடும்பத்தின் இந்த அசாத்தியப் பயணம், உலகையே வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
