சமீபத்தில் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, இந்திய வகை ஜிமிக்கி கம்மல்களை அணிந்து பொதுவெளியில் தோன்றியது பலரது கவனத்தை ஈர்த்தது. குறிப்பாக, அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் உடனான சில அரசியல் கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பிறகு மெலோனி இந்த ஆபரணத்தை அணிந்ததால், இது ஒரு அமைதியான ஆனால் வலிமையான பதிலடியாகப் பார்க்கப்படுகிறது.

இதனால் ‘எனக்கு யாரும் முதலாளி இல்லை’ என்ற ரீதியில் தனது தனித்துவத்தையும் சுதந்திரத்தையும் பறைசாற்றும் விதமாக மெலோனி இந்த நகையைத் தேர்வு செய்துள்ளதாக இணையவாசிகள் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்திய கலாச்சாரத்தின் அடையாளமான இந்த ஜிமிக்கி கம்மல்கள், மெலோனியின் தோற்றத்திற்குப் புதுப்பொலிவைத் தந்தது மட்டுமின்றி, சர்வதேச அரசியலில் ஒரு குறியீடாகவும் மாறியுள்ளது.

இந்நிலையில் ட்ரம்ப் போன்ற உலகத் தலைவர்களின் ஆதிக்கப் போக்குக்கு அடிபணியாமல், தான் ஒரு சுதந்திரமான பெண் தலைவராகச் செயல்படுவதை அவர் இதன் மூலம் உணர்த்தியிருப்பதாகக் கூறப்படுகிறது. மெலோனியின் இந்த ‘ஃபேஷன்’ தேர்வு வெறும் அலங்காரம் மட்டுமல்ல, அது அவரது அரசியல் நிலைப்பாட்டின் ஒரு பகுதியாகும் என்பது பலரது கணிப்பாக உள்ளது.