நரேந்திர மோடி மன்கி பாத் நிகழ்ச்சியில் உரையாடும்போது உடல் பருமனை பற்றி பேசினார். அவர் சாப்பாட்டில் எண்ணெயை குறைத்து பயன்படுத்துமாறு அறிவுரை வழங்கினார். அதாவது உடல் பருமனை எதிர்த்து போராடும் வலுவான குரலை மக்கள் எழுப்பும் வகையில் உணவில் 10% எண்ணையை குறைப்பதன் மூலம் அந்த சவாலை 10 பேருக்கு கடத்துமாறு கேட்டுக் கொண்டார். அதோடு உடல் பருமனை எதிர்த்து போராடுவதற்காக 10 பேரின் பெயர்களை பிரதமர் மோடி பரிந்துரைத்துள்ளார். அதன்படி நடிகர் மாதவன், நடிகர் மோகன் லால், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா, ஜம்மு காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா உட்பட 10 பேரின் பெயரை அவர் பரிந்துரை செய்துள்ளார்.

உடல் பருமனுக்கு எதிரான போராட்டத்தை வலுப்படுத்தி சாப்பாட்டில் எண்ணெயை குறைப்பதோடு அது தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த இந்த 10 பேரை பரிந்துரை செய்துள்ளதாக பிரதமர் மோடி கூறியதோடு இவர்களின் பங்களிப்பால் உடல் பருமனுக்கு எதிரான இயக்கம் விரிவடையும் என்றார். மேலும் துப்பாக்கி சூடு சாம்பியன் மனு பாக்கர், பிரபல போஜ்புரி நடிகர் மற்றும் பாடகர் நிராஹூவா, இன்போசிஸ் இணை நிறுவனர் நந்தன் நிலேகனி, பாடகி ஸ்ரேயா கோஷல் மற்றும் எம்.பி சுதாமூர்த்தி ஆகியோர் பிரதமர் மோடியால் பரிந்துரை செய்யப்பட்ட பிற நபர்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.