பத்மஸ்ரீ விருது பெற்ற நீரிழிவு நிபுணர் டாக்டர் வி. மோகன், சென்ட்ரம் வெளியிட்ட ஒரு விளம்பரத்திற்கு எதிராக குரல் கொடுத்துள்ளார். மல்டி வைட்டமின் பற்றி வெளியிட்ட விளம்பரம் தவறானது என்று அவர் கூறியுள்ளார். இது சமூகத்திற்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தக் கூடியது என்றும் தெரிவித்துள்ளார்.

மல்டி வைட்டமின் குறைபாடு என்று எதுவும் கிடையாது, வைட்டமின் டி குறைபாடு மற்றும் பி 12 குறைபாடு போன்ற விஷயங்கள் உள்ளது. மல்டி வைட்டமின்களை உட்கொள்வது நல்லதை விட அதிக தீங்கு விளைவிக்கும். மல்டி வைட்டமின்கள் உடலில் குறைபாடு உள்ள வைட்டமின்களை வழங்க முடியாமல் போகலாம் என்று அவர் பதிவிட்டுள்ளார்.