தமிழகத்தில் 12 மற்றும் 11ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் கடந்த மார்ச் 13 மற்றும் 14 ஆகிய தேதிகளில் தொடங்கிய நிலையில் தேர்வுகள் நடந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் தமிழகத்தில் ஏப்ரல் 6 முதல் 20ஆம் தேதி வரை நடைபெற உள்ளபத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுக்கு விண்ணப்பித்த தனித்தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் சற்று நேரத்தில் வெளியாகிறது. தேர்வர்கள் www.dge.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்ப எண் மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து ஹால் டிக்கெட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இதனைத் தவிர பத்தாம் வகுப்பு அறிவியல் பாட செய்முறை தேர்வு தேதி விவரங்களை சம்பந்தப்பட்ட பள்ளியை தொடர்பு கொண்டு அறிந்து கொள்ளலாம் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.