தமிழகத்தில் இன்று முதல் ஆவின் பால் வழங்கப்போவதில்லை என பால் உற்பத்தியாளர்கள் தெரிவித்துள்ளனர். பால் கொள்முதல் விலையை லிட்டருக்கு ஏழு ரூபாய் உயர்த்த கோரி அமைச்சர் இராசருடன் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் உடன்பாடு எட்டவில்லை. இதனைத் தொடர்ந்து பால் உற்பத்தியாளர்கள் இன்று முதல் திட்டமிட்டபடி போராட்டத்தில் ஈடுபடுவார்கள் என அந்த சங்கத்தின் தலைவர் ராஜேந்தர் கூறியுள்ளார்.

இதனைத் தொடர்ந்து தற்போது பால் கொள்முதல் விலையில் லிட்டருக்கு ஏழு ரூபாய் உயர்த்த கோரி தமிழ்நாடு முழுவதும் பால் உற்பத்தியாளர்கள் போராட்டத்தை தொடங்கியுள்ளனர். சேலம், ஈரோடு, தேனி, மதுரை மற்றும் கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் ஆவினுக்கு பால் வழங்கப்படவில்லை. டீக்கடைகளுக்கும் பால் கிடைக்காததால் டீ விலை உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. காலையிலிருந்து பால் கிடைக்காமல் மக்கள் தவிப்புக்கு ஆளாகியுள்ளனர்.