10 ஆம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் ஹால் டிக்கெட் வருகின்ற மார்ச் 15ஆம் தேதி முதல் http://dge.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. பத்தாம் வகுப்பு பொது தேர்வுகள் மார்ச் 26 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் எட்டாம் தேதி வரை நடைபெறுகிறது. ஹால் டிக்கெட்டில் பெயர் உள்ளிட்ட விவரங்களில் ஏதாவது திருத்தங்கள் இருந்தால் பள்ளியின் தலைமை ஆசிரியரை அணுகவும்.