உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனம் கண்டெடுக்கும் ஓலைச்சுவடிகளை புத்தாக்கம் செய்யும் பணிக்கு சுவடியியல் மற்றும் பதிப்பியல் பட்டப்படிப்பு படித்தவர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த படிப்புக்கு உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தின் மூலம் 2013 ஆம் ஆண்டு முதல் ஓராண்டு பட்டய படிப்பு வகுப்புகள் நடந்து வருகின்றது. அடுத்த கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளதாகவும் இந்த படிப்புக்கான விண்ணப்பத்தை அதிகாரபூர்வ இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து அல்லது நேரில் சென்று பெற்றுக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

10 ஆம் வகுப்பு கல்வித் தகுதி கொண்ட யார் வேண்டுமானாலும் இந்த படிப்புக்கு விண்ணப்பிக்கலாம். இதற்கு விண்ணப்பிக்க ஏப்ரல் ஐந்தாம் தேதி இறுதி நாள் ஆகும். இந்த படிப்பை ஆர்வத்தோடு பயிலும் மாணவர்களை ஊக்கப்படுத்தும் விதமாக எழுத்து தேர்வின் அடிப்படையில் 10 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு மாதம் தோறும் 3000 ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும். நடைபாண்டு உதவித்தொகைக்கான தகுதி தேர்வு ஏப்ரல் 12ஆம் தேதி அன்று உலக தமிழ் ஆராய்ச்சி நிறுவனத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.