ஒரு கப் சூடான தேநீருடன் இரண்டு மொரு மொரு சமோசாக்கள் இருந்தால் போதும் பலருக்கும் அந்த நாளானதே அழகாக மாறிவிடும். ஏன் இதுதான் பல பேரின் காலை டிபன். ஆனால் அந்த டீயும் சமோசாவுமே துயரத்தை கொடுத்திருப்பதாக ஒருவர் ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். ஊடகவியலாளர் பராக் கான் தனது ட்விட்டர் பக்கத்தில் புகைப்படத்துடன் ஒரு பதிவிட்டுள்ளார். அதில் மும்பை விமான நிலையத்தில் ஒரு தேநீர், இரண்டு சமோசா மற்றும் ஒரு குடிநீர் பாட்டில் வாங்கியதாகவும் அதற்கு ரூபாய் 490 விலையாக கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

மேலும் இரண்டு சமோசாக்களின் விலை ரூபாய் 250 என்றும் ஒரு சூடான இஞ்சி போட்ட தேநீர் விலை ரூபாய் 160 எனவும் அந்த புகைப்படத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த புகைப்படத்தில் இருக்கும் சமோசாக்களோ மிக சாதாரணமான சமோசாக்கள்தான். நாட்டிலேயே ஏழை மக்களும் வாங்கும் அளவிற்கு தற்போதைக்கு இருப்பது இந்த இரண்டு உணவுகள் தான். இவையும் விமான நிலையத்தில் இந்த அளவிற்கு விற்கப்படுவது என்றால் ஏழை மக்களின் நிலைமை என்ன என பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.