நாடு முழுவதும் சிலிண்டர் விலையானது அதிக அளவில் உயர்ந்துள்ளது. கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் பொருளாதார மந்த நிலை காரணமாக இந்த விலை உயர்வு உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இதனை மக்கள் சமாளிக்க சிரமப்படுவதால் கொரோனா காலத்தில் ஏற்கனவே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சிலிண்டர் மானியமானது மீண்டும் கடந்த சில மாதங்களாக மத்திய அரசால் வழங்கப்பட்டு வருகிறது.

இருப்பினும் சிலிண்டர் விலையானது ரூ.1100 தாண்டியுள்ள நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தில் அரசு பொது மக்களுக்கு மகிழ்ச்சி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது வறுமைக்கோட்டிற்கு கீழ் ரேஷன் கார்டு வைத்திருப்பவர்களுக்கு மட்டும் கேஸ் சிலிண்டர் 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த திட்டமானது வரும் ஏப்ரல் 2023 முதல் அமலுக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.