இந்தியாவில் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியாக எஸ்பிஐ வங்கி செயல்பட்டு வருகிறது. இந்த வங்கி மகளிர் சுய உதவி குழுக்கள் சமூக சக்தி திட்டத்தை கடந்த அக்டோபர் 1-ஆம் தேதி முதல் தொடங்கி 10 லட்ச ரூபாய் வரையிலான கடன் தொகையை பிணை இல்லாமல் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வழங்கி வருகிறது. இந்த கடனை பிணை இல்லாமல் பெற்றுக்கொள்வதோடு, கடனுக்கு ஒப்புதல் வழங்கும்போது எந்த ஒரு தொகையையும் டெபாசிட் செய்யவும் தேவையில்லை. இந்த திட்டம் வருகிற மார்ச் மாதம் 31-ஆம் தேதிக்குள் முடிவடைய போகிறது.

அதன் பிறகு எஸ்பிஐ வங்கியில் அனைத்து மாவட்டங்களில் செயல்படும் மகளிர் சுய உதவி குழுக்களும் பிணை இல்லாமல் 10 லட்ச ரூபாய் வரையிலான கடனை பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் உள்ள மகளிர் சுய உதவி குழுக்கள் ரூபாய் 3 லட்சம் வரையிலான கடனை 7 சதவீத வட்டிக்கும், 5 லட்ச ரூபாய் வரையிலான கடனை 8.30 சதவீத வட்டிக்கும் வாங்கிக் கொள்ளலாம். மேலும் 5 லட்ச ரூபாய்க்கு மேல் கடன் தேவைப்பட்டால் 9 சதவீத வட்டியில் வாங்கிக் கொள்ளலாம்.