இந்திய கடலோர காவல் படையினர் குஜராத்தில் பயிற்சி பெற்றனர்.

குஜராத் கடற்கரையில் இந்திய கடலோர காவல் படையினர் போதை பொருள் எதிர்ப்பு பயிற்சியை மேற்கொண்டனர். குஜராத் மாநிலம் ஓக்கா மற்றும் சார்கேஜ் பகுதிக்கு அருகே இந்திய கடலோர காவல் படையினர் பாகிஸ்தான் உடனான கடல் எல்லையில் பயிற்சி மேற்கொண்டனர். போதைப் பொருளுக்கு எதிரான இந்த பயிற்சியில் இந்திய கடலோர காவல் படையினருக்கு பல்வேறு பிரிவுகளின் கீழ் பயிற்சி அளிக்கப்பட்டது.