செய்தியாளர்களிடம் பேசிய ஹிந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மாண்புமிகு தமிழக முதல்வரின் நல்லாட்சியில் திருப்பணிகள் ஏற்றுக் கொள்ளப்பட்டு,  பல ஆண்டுகளாக கும்பாபிஷேகம் நடைபெறாமல் இருந்த திருக்கோயில்களை குடமுழுக்கு செய்திடவும்,  ஆண்டு கணக்கிலேயே பராமரிப்பு காரணமாக ஓடாமல் இருந்த திருத்தேர்களை பக்தர்கள் நேர்த்திக்கடனுக்கு பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். அதேபோல திருக்கோயில் உன்னுடைய திருக்குளங்கள்,  திருமணம் மண்டபங்கள், விருந்து மண்டபங்கள் அதேபோல் பக்தர்கள் தங்கும் விடுதிகள் போன்றவைகளை புனரமைக்கவும் உத்தரவிட்டார்.

அந்த வகையிலே இந்த திருக்கோயில் திருப்பணி என்பது 2016ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டு பல்வேறு விதமான தடங்கலின் காரணமாக குடமுழுக்கு நடைபெறுவது தள்ளி போடப்பட்டது.  மாண்புமிகு தமிழக முதல்வர் ஆட்சி பொறுப்பேற்றவுடன் 7ஆம் மாதம் 27 ஆம் தேதி இந்த திருக்கோயிலின் ஆய்வுக்கு வந்தோம். அதை தொடர்ந்து கடந்த ஆண்டு 9ஆம் மாதம் இந்த திருக்கோயில் ஆய்வுக்கு வந்தோம்.

இந்த ஆண்டு 9ஆம் மாதம் இந்த திருக்கோயிலின் ஆய்வுக்கு வந்து பணிகளை வேகப்படுத்தி,  இன்றைக்கு மக்கள் மகிழ்ச்சியிருக்கின்ற வகையில் சேலத்திலே முதல் முதலிலே  பக்தர்கள் வழிபாட்டு தலமாக இருந்த அம்மன் திருக்கோயில்….  கோட்டை மாரியம்மன் திருக்கோயில் சேர்த்து இன்றைக்கு இந்த ஆட்சி ஏற்பட்ட பிறகு 1118 திருக்கோயில்கள் கும்பாபிஷேகம் நடந்திருக்கிறது.

இந்த திருக்கோயிலை பொறுத்தவரை 1993-ஆம் ஆண்டு ராஜகோபுரம் குடமுழுக்கு நடைபெற்று இருக்கிறது. இந்த திருக்கோவிலுக்கு எப்போது கும்பாபிஷேகம் நடைபெற்றது என்ற வரலாறு இல்லை. எத்தனை ஆண்டுகளுக்கு முன்னால் இந்த திருக்கோயிலினுடைய கும்பாபிஷேகம் நடைபெற்றது என்பதற்கான சான்றிதழ் இல்லை. இப்படி நடைபெறாத திருக்கோயில்களினுடைய திருப்பணிகளை மேற்கொண்டு,  குடமுழுக்கு நடத்துகின்ற ஆட்சி இந்த ஆட்சி என்பதற்கு இந்த திருக்கோயிலினுடைய குடமுழுக்கே  ஒரு சாட்சி.

இந்த திருக்கோயிலின் உடைய குடமுழுக்கில்  அதிக அக்கறை கொண்டு… நீதிமன்றங்கள் வரை சென்ற இந்த திருக்கோயில் உடைய குடமுழுக்கு வழக்குகளை நேர்த்தியோடு…. நீதியரசர்கள்  விரும்புகின்ற வகையில் இன்றைக்கு கோலாகலமாக இந்த குடமுழுக்கு நடந்திருக்கிறது என்றால் ? மாண்புமிகு தமிழக முதல்வரின் உடைய உந்து சக்தி தான் காரணம்.

இந்த திருக்கோவிலின் திருப்பணியில் அதிக அக்கரை மேற்கொண்டவர் நம்முடைய சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன் என்றால் ? அது மிகையாகாது. அதேபோல் இந்த திருக்கோயில் உடைய திருப்பணிக்கு,  முழு ஒத்துழைப்பை நல்கி இருக்கின்ற துறைச் சார்ந்த அனைவருக்கும் இந்த நேரத்தில் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த திருக்கோவிலுடைய தங்கத் திருத்தேர்…  இதுவரையில் திருப்பணி ஆரம்பிக்கப்பட்ட 2014 ஆம் ஆண்டில் இருந்து திருத்தேர் பவனி வரவில்லை.

உபாயத்தாரர் நிதியோடு, 3,04,000 ரூபாய் செலவில் இன்றைக்கு இந்த திருக்கோயிலுடைய திருப்பணி…. திருத்தேர்  உடைய திருப்பணி நிறைவு பெற்று,  அதுவும் பக்தர்களுடைய நேர்த்திக்கடனுக்கு  வெளியோட்டம் விடப்பட்டது. இந்த திருக்கோயிலை பொறுத்த வரை 26 பணிகள் மேற்கொள்ளப்பட்டு,  சுமார் 4 கோடியே 57 லட்ச ரூபாய் செலவில் இன்றைக்கு உபயதார்களும் உடனிருந்து இந்து சமய அறநிலைத்துறையின் பொதுநல நிதியில் இருந்தும்  ஏற்பாடு செய்யப்பட்டு, இன்றைக்கு இந்த திருக்கோவிலின் குடமுழுக்கு நடந்திருக்கிறது.