தமிழ்நாடு மின்சார வாகனக் கொள்கை 2023ஐ தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ளார். இந்த கொள்கையானது மின்வாகன உற்பத்தியில் 50 ஆயிரம் கோடி முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் 1.50 லட்ச வேலை வாய்ப்பை உருவாக்கும் நோக்கத்திலும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. மாறிவரும் காலச் சூழலுக்கு ஏற்ப மின்வாகன உற்பத்தியில் கவனம் செலுத்த வேண்டும் என இந்த கொள்கை வெளியிடப்பட்டிருக்கிறது.