கோடை வெயிலின் தாக்கமானது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. பலர் வீட்டிலே முடங்கி கிடந்தாலும் பள்ளி, கல்லூரி, வேலைக்கு செல்பவர்கள் வெயிலில் சென்று வருகின்றனர். இதன் காரணமாக தெற்கு மத்திய ரயில்வேயின் கீழ் இயங்கும் 170 ரயில் நிலையங்களில் 468 வாட்டர் கூலர்களை ரயில்வே நிர்வாகம் புதிதாக அமைத்துள்ளது.

அதாவது ரயில் பயணிகளுக்கு குளிர்ந்த நீரை வழங்க சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் விற்பனை இயந்திரங்களை ரயில்வே நிர்வாகம் நிறுவியுள்ளது. இதன்மூலம் 1 லிட்டர் தண்ணீர் வெறும் ரூ.5-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல ஒரு கிளாஸ் தண்ணீர் ரூ.2-க்கும், அரை லிட்டர் தண்ணீர் ரூ.3-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் 2 லிட்டர் குளிர்ந்த நீர் ரூ.10-க்கு விற்பனை செய்யப்படுகிறது.