பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த 50 வயது நபருக்கு 60வது குழந்தை பிறந்துள்ள சம்பவமானது அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி இருக்கிறது.

பாகிஸ்தான் பலூசிஸ்தான் மாகாணத்த்தில் வசித்து ஜான் முகமது கான் கில்ஜி. 50 வயதாகும் இவர் இதுவரை 3 திருமணம் செய்து உள்ளார். 3 மனைவிகள் மூலம் இவருக்கு 59 குழந்தைகள் இருந்தனர். தற்போது 60 வது குழந்தை பிறந்துள்ளது.

மேலும் பல குழந்தைகளை பெற்றுக்கொள்ள ஆசை இருப்பதாகவும், விரைவில் அடுத்த திருமணம் செய்ய உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இதை பார்த்த நெட்டிசன்கள் பலரும் இந்த வயதிலும் இது தேவைதானா? என்று தங்களது கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.