ஈரோடு கிழக்கு தொகுதியில் பிப்ரவரி 5ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் திமுக சார்பில் விசி சந்திரகுமாரும் நாம் தமிழர் கட்சி சார்பில் சீதாலட்சுமியும் வேட்பாளராக போட்டியிடும் நிலையில் மற்ற கட்சிகள் போட்டியிடவில்லை. வருகிற பிப்ரவரி 5ஆம் தேதி தேர்தல் நடைபெற இருப்பதால் திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியினர் ஓட்டு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் தேர்தல் விதிமுறைகளை மீறி பிரச்சாரம் செய்த காரணத்திற்காக நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் உட்பட ஐந்து பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அதாவது அனுமதிக்கப்பட்ட நேரத்தை விட கூடுதல் நேரம் எடுத்து பொதுக்கூட்டம் நடத்தியதாக சீமான் மீது பறக்கும் படை அதிகாரி ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. ஏற்கனவே சீமான் மீது 4 வழக்குகள் பதியப்பட்டுள்ளது. மேலும் இதனால் மொத்தம் ஐந்து வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
