கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குளச்சல் மீன்பிடி துறைமுகத்திலிருந்து ஏராளமான மீனவர்கள் விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்றுள்ளனர். நேற்று காலை ஒரு விசைப்படகு மட்டும் கரைக்கு திரும்பியது. இந்நிலையில் ஒரு டன் எடையுடைய திரட்சி எனப்படும் ராட்சத திருக்கை மீனை மீனவர்கள் கொண்டு வந்தனர்.

இதனையடுத்து கரையிலிருந்து மீனை ஏலக்கூடத்திற்கு கொண்டுவர இயலவில்லை. இதனால் மீனவர்கள் அதனை 8 துண்டுகளாக வெட்டி ஏலக் கூடத்திற்கு கொண்டு வந்து 61 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளனர். அந்த வகை மீன்களில் இருந்து மருந்து பொருட்கள் தயாரிக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.