தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பரிசு தொகப்பு வழங்கப்படுவதற்கான அறிவிப்பை சமீபத்தில் தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை, இலவச வேஷ்டி சேலை, ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் கரும்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. பொங்கல் பரிசு தொகுப்பு பெறுவதற்கான டோக்கன் வினியோகம் நேற்று முதல் தமிழகத்தில் தொடங்கியுள்ளது. இந்த வருடம் அனைத்து பொருட்களும் தரமாக இருக்க வேண்டும் எனவும் அரசு தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து பொங்கல் பரிசு தொகை முதல்வர் ஸ்டாலின் வருகின்ற ஜனவரி ஒன்பதாம் தேதி தொடங்கி வைக்கிறார். பரிசு தொகுப்புக்கான பொருட்கள் மற்றும் மாதம்தோறும் வழங்கும் பொருட்கள் 60% அனைத்து மாவட்டங்களுக்கும் சென்றுள்ள நிலையில் அடுத்த இரண்டு நாட்களில் 100% பொருட்கள் கொண்டு சேர்க்கப்படும் என உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார். மேலும் தமிழகத்தில் 17 மாவட்டங்களில் கரும்பு கொள்முதல் செய்யப்பட்டு வருவதாகவும் அந்தந்த மாவட்டங்களில் ஆட்சியர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கொள்முதல் செய்யும் பணி நடைபெற்று வருவதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் விவசாயிகளுக்கு பயனளிக்கும் விதமாக ஒரு கரும்பின் விலை 33 ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.