சமூக வலைதளங்களில் தற்போது ஒரு கால் டாக்ஸி ஓட்டுநருக்கும், பெண் பயணிக்கும் இடையே நடந்த உரையாடல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பிட்ட அந்தப் பெண் தனது இறப்பிடத்திற்கு வந்தடைந்தவுடன், “நான் பணம் கொடுக்க முடியாது, நான் தவறான ‘டெரி’ (Teri) கேப்-ஐ புக் செய்துவிட்டேன்” என்று கூறி தரக்குறைவான வார்த்தையைப் பயன்படுத்தியுள்ளார். பொதுவாக இத்தகைய சூழலில் ஓட்டுநர்கள் வாக்குவாதத்தில் ஈடுபடுவது வழக்கம், ஆனால் இந்த ஓட்டுநர் கையாண்ட விதம் அனைவரையும் வியக்க வைத்துள்ளது.

அந்தப் பெண்ணின் அநாகரீகமான பேச்சைக் கேட்ட ஓட்டுநர், “மரியாதையாகப் பேசுங்கள்; நீங்கள் தரவேண்டிய இந்த ₹132 என் வாழ்க்கையை ஒன்றும் மாற்றிவிடப் போவதில்லை” என்று நிதானமாகவும், அதேசமயம் நெத்தியடியாகவும் பதிலளித்துள்ளார்.

“>

 

இந்தச் சம்பவம் உழைக்கும் வர்க்கத்தினர் எதிர்கொள்ளும் மன உளைச்சலையும், சில பயணிகளின் பொறுப்பற்றத் தன்மையையும் வெளிச்சம் போட்டுக் காட்டியுள்ளது. வெறும் நூறு ரூபாய்க்காக ஒருவரின் உழைப்பை மதிக்காமல் பேசுவதும், தவறான வார்த்தைகளைப் பயன்படுத்துவதும் எந்த விதத்தில் நியாயம் என்று நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

அதே வேளையில், பொறுமையை இழக்காமல் அந்தப் பெண்ணிற்குப் பாடம் புகட்டிய ஓட்டுநரின் கண்ணியமான பதிலுக்கு இணையத்தில் பாராட்டுகள் குவிந்து வருகின்றன. “பணம் இல்லையென்றாலும் பரவாயில்லை, மனித நேயமும் மரியாதையும்தான் முக்கியம்” என்பதை இந்தச் சம்பவம் மீண்டும் உணர்த்தியுள்ளது.