உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில், கணவன் – மனைவி இடையேயான குடும்பத் தகராறு, விடுதி அறையில் காதலனுடன் மனைவி பிடிபட்ட சம்பவத்தால் பெரும் பரபரப்பாக மாறியது. நவாபாத் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட விருந்தினர் மாளிகை ஒன்றில் இந்த ‘ஹை வோல்டேஜ்’ நாடகம் அரங்கேறியது.
பாதிக்கப்பட்ட கணவருக்கு கடந்த ஜனவரி 11-ஆம் தேதி தனது மனைவி வேறொரு இளைஞருடன் பயணம் செய்வது குறித்து ரகசியத் தகவல் கிடைத்தது. இதனால் சந்தேகமடைந்த அவர், மனைவியைப் பின்தொடர்ந்துச் சென்றார். அப்போது, பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள ஒரு விடுதியில் அறை எண் 103-ஐ முன்பதிவு செய்து மனைவியும், காதலனும் உள்ளே சென்றனர். உடனடியாக கணவர் ‘112’ என்ற எண்ணுக்கு அழைத்து காவல்துறைக்கு தகவல் அளித்தார்.
UP मे झांसी के नवाबाद होटल मे पति ने पत्नि को उसके बॉयफ्रेंड के साथ होटल मे अय्याशी करते रंगे हाथ पकड़ लिया। पति पुलिस को साथ लेकर यहाँ पहुंचा था। पुलिस व महिला के पति को देख प्रेमी बैड के नीचे छिप गया था। महिला ने साफ कहा की पति 2 साल से साथ नहीं रह रहा.. तो क्या करती? अपनी… pic.twitter.com/hSReL1wTsO
— TRUE STORY (@TrueStoryUP) January 15, 2026
போலீசார் சம்பவ இடத்திற்கு வருவதற்கு முன்னரே, விடுதியில் கணவன் – மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு பரபரப்பு நிலவியது. போலீசார் உள்ளே நுழைந்ததைக் கண்ட காதலன் பயந்துபோய் படுக்கைக்கு அடியில் ஒளிந்துகொண்டார். சோதனையிட்ட போலீசார், படுக்கைக்கு அடியில் இருந்த இளைஞனை வெளியே இழுத்து விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
பாதிக்கப்பட்ட கணவர் போலீசாரிடம் கூறுகையில், “எங்களுக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. ஓராண்டிற்கும் மேலாக என் மனைவி என்னுடன் வசிக்காமல், பள்ளி ஒன்றில் வேலை செய்துகொண்டு இந்த இளைஞனுடன் பழகி வருகிறார். விவாகரத்து செய்ய வேண்டுமென்றால் ரூ.10 லட்சம் தரவேண்டும் என மிரட்டுகிறார்” எனத் தெரிவித்தார்.
ஆனால் அந்தப் பெண்ணோ, “நான் நீண்டகாலமாக கணவருடன் வசிக்கவில்லை. என் விருப்பப்படி வாழ எனக்கு உரிமை உள்ளது. என் காதலனுடன் வாழவே நான் விரும்புகிறேன், கணவரை விவாகரத்து செய்யத் தயார்” என போலீார் முன்னிலையிலேயே தெரிவித்தார்.
இது குறித்து காவல் நிலைய அதிகாரி ரவி ஸ்ரீவஸ்தவா கூறுகையில், “விடுதியில் தகராறு குறித்து வந்த தகவலின் அடிப்படையில் சம்பவ இடத்திற்குச் சென்று மூன்று பேரையும் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தோம். அனைவரிடமும் வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. புகாரின் அடிப்படையில் சட்டப்பூர்வ விசாரணை நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.
