தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் பட்டதாரியான தன்பஜன் வினோத்(32) என்பவர் வசித்து வருகிறார். இவர் உணவுப் பொருள் கொள்முதல் தரகர் வேலை பார்த்து வருகிறார். கடந்த ஏப்ரல் மாதம் 22-ஆம் தேதி உலக பூமி தினம் கொண்டாடப்பட்டபோது பெட்ரோல், டீசல் உள்ளிட்ட எரி பொருட்களை உபயோகப்படுத்தும் வாகனங்களை தவிர்த்து பொதுமக்கள் சைக்கிள்களை பயன்படுத்த வேண்டும் என விழிப்புணர்வு பிரச்சாரம் நடத்தப்பட்டது.

அப்படி செய்தால் சுற்றுச்சூழல் பாதுகாக்கப்படுவதோடு, தனி மனிதனின் ஆரோக்கியமும் மேம்படும் என வலியுறுத்தப்பட்டதால் தன்பஜன் வினோத் பொதுமக்களிடம் இது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த முடிவு செய்தார். அதன்படி கடந்த ஜூலை மாதம் 4-ஆம் தேதி முதல் தன்பஜன் வினோத் கன்னியாகுமரி வரை சுமார் 1,200 கிலோமீட்டர் தூரம் சைக்கிளில் விழிப்புணர்வு பயணத்தை தொடங்கினார்.

நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள ஓசூருக்கு வந்த வினோத்துக்கு பொதுமக்கள் வரவேற்பு அளித்தனர். இதுகுறித்து வினோத் கூறியதாவது, ஆடி மாதத்தில் அனைத்து பகுதிகளிலும் பலத்த காற்று வீசுவதால் தேசிய நெடுஞ்சாலையில் சைக்கிள் பயணத்தை மேற்கொள்வது மிகுந்த சவாலாகவும், சிரமமாகவும் இருக்கிறது என தெரிவித்தார்.