நீலகிரி மாவட்டத்தில் உள்ள கூடலூர் பகுதியில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் வசித்து வருகிறார். விவசாயியான கிருஷ்ணமூர்த்தி தனது வீட்டில் பிரம்ம கமலம் பூச்செடிகளை இரண்டு பூந்தொட்டிகளில் வளர்த்து வருகிறார். இந்த பிரம்ம கமலம் பூக்கள் இரவில் மட்டுமே பூக்கும். இதனால் இது இரவின் இளவரசி என அழைக்கப்படுகிறது.

இந்நிலையில் மருத்துவ நன்மைகள் கொண்ட பிரம்ம கமலம் பூக்கள் கல்லீரல் பாதிப்பு, நரம்பு கோளாறு, காய்ச்சல், மாதவிடாய் தோல் உள்ளிட்ட பிரச்சனைகளை சரி செய்யவும், ரத்தத்தை சுத்திகரிக்கவும் உபயோகப்படுத்தப்படுகிறது. நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தி வளர்த்து வந்த செடிகளில் பிரம்ம கமலம் பூக்கள் பூத்தது. இதனை அறிந்த பொதுமக்கள் ஆர்வத்துடன் பூக்களை பார்த்து சென்றனர்.