வயது வித்தியாசம் இல்லாமல் தலையில் வெள்ளை முடி தோன்றுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. சமீபத்தில் இங்கிலாந்தில் ரியான் என்ற நபர் ஹேர் டையை பயன்படுத்தி உள்ளார். மறுநாள் காலை கண் விழித்து பார்த்த போது முகம் முழுவதும் வீங்கி இருந்ததை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனே அவர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து அவர் பயன்படுத்திய ஹேர் டையில் பாராபெனிலினெடியமைன் என்ற ரசாயனம் கலந்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.