இன்றைய காலகட்டத்தில், தொழில்நுட்ப வளர்ச்சி மனிதர்களின் செயல்பாடுகளை எளிதாக்கி வருகிறது. குறிப்பாக சீனாவில், அதிநவீன கண்டுபிடிப்புகள் அன்றாட வாழ்க்கையை மாற்றியமைத்துக் கொண்டே இருக்கின்றன.

இந்த சூழலில், ஒரு கார் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொண்ட  நிலையில் சாமர்த்தியமாக  வெளியேறும் வீடியோ ஒன்று, இணையத்தில் பலரையும் வியப்பில் ஆழ்த்தி, வைரலாக பரவி வருகிறது. மக்கள் “இந்த மாதிரியான கார் தான் நமக்கு தேவை” எனக் கருத்து தெரிவிக்கின்றனர்.

வீடியோவில், ஒரு கார் நடுத்தெருவில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி நிற்கிறது. ஆனால், அடுத்த கணம் அந்தக் காரின் சக்கரங்கள் அதிசயமாக வளைந்து, நேராக அல்லாமல் சிறிது சாய்ந்த வடிவத்தில் சுழல தொடங்குகின்றன. அதன் பிறகு, அந்தக் கார் எளிதாகவே அருகிலுள்ள இடைவெளிக்குள் சென்று, நெரிசலிலிருந்து விலகி விடுகிறது. இந்த “ஸ்லைடு” போன்று காரின் இயக்கம், பார்க்கும் அனைவரையும் ‘இந்த மாதிரி டெக் எங்க கிடைக்கும்?’ என்று ஆச்சரியப்பட வைக்கிறது.

 

View this post on Instagram

 

A post shared by Dr.Scholarship (@china_dr.scholarship)

“>

இந்த அதிசய வீடியோவை @china_dr.scholarship என்ற இன்ஸ்டாகிராம் பக்கம் பகிர்ந்துள்ளது. தற்போது இது ஆயிரக்கணக்கான பார்வைகளை பெற்று, தத்தளிக்கும் போக்குவரத்தில் இதுபோன்ற கார்கள் வந்தால் என்ன நன்மைகள் என்று மக்கள் விவாதிக்க ஆரம்பித்துள்ளனர்.