பிரபல விஜய் டிவியில் ஒளிபரப்பான குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் பவித்ரா லட்சுமி. இவர் தமிழில் நாய் சேகர் என்ற படத்தில் நடித்த நிலையில் மலையாளத்தில் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் நடிகை பவித்ர லட்சுமி புல்லட் பைக் ஓட்டும் வீடியோவை வெளியிட்டு இருந்தார். அவர் பைக் ஓட்டும்போது ஹெல்மெட் அணியவில்லை. இதைப் பார்த்த ரசிகர்கள் பலர் ஹெல்மெட்  போடாமல் பைக் ஓட்டுவதா என கண்டனங்களை தெரிவித்து வந்தனர்.

அதோடு அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கருத்து தெரிவித்து வந்தனர். இதனால் பதறிப்போன நடிகை பவித்ரா லட்சுமி தன்னுடைய instagram பக்கத்தில் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். அதில் எனக்கு புல்லட் பைக் ஓட்ட வேண்டும் என்பது நீண்ட நாள் கனவு. அதற்காக நான் ஒரு பயிற்சி நிலையத்தில் சேர்ந்து கற்றுக் கொண்டு வருகிறேன். நான் பயிற்சி எடுக்கும் போது ஹெல்மெட் அணிந்துதான் பயிற்சி எடுக்கிறேன். ஆனால் வீடியோ எடுப்பதற்காக ஒரு பத்து நிமிடம் மட்டும் ஹெல்மெட் போடாமல் புல்லட் ஓட்டினேன். மற்றபடி நான் எந்த ஒரு விதிகளையும் மீறவில்லை என்று விளக்கம் கொடுத்துள்ளார். மேலும் பவித்ராலட்சுமியின் இந்த பதிவு தற்போது வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது.