மயிலாடுதுறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த 14 வயது சிறுமி, ஐந்து மாத கர்ப்பிணியாக இருப்பது தெரியவந்து பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்துத் தகவல் அறிந்த குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர்கள் மற்றும் மகளிர் போலீசார் நடத்திய விசாரணையில், அந்தச் சிறுமி சென்னையைச் சேர்ந்தவர் என்பதும், விடுமுறைக்காக மயிலாடுதுறையில் உள்ள உறவினர் வீட்டிற்கு வந்திருப்பதும் தெரியவந்தது.
சென்னையில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்த அந்தச் சிறுமி, டியூஷனுக்குச் சென்றபோது ஆட்டோவில் வந்த அறிமுகமான வாலிபர் ஒருவர் வழி கேட்பது போல நடித்து, தன்னை கடத்திச் சென்று பலவந்தப்படுத்தியதாகக் கூறியுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து மயிலாடுதுறை அனைத்து மகளிர் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளியைத் தீவிரமாகத் தேடி வருகின்றனர்.
