சென்னையில் நித்ய ஜீவன் ‌(19) என்ற இளம் பெண் வசித்து வந்துள்ளார். இவர் ஒரு தனியார் கல்லூரியில் பிசிஏ 3-ம் ஆண்டு படித்து வரும் நிலையில் பகுதி நேரமாக ஒரு தனியார் நிறுவனத்தில் வேலையும் பார்த்து வந்துள்ளார். இவருடைய தந்தை ஆப்ரகாம். இவருக்கு உடல்நலம் சரியில்லாததால் சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவருக்கு துணையாக அவருடைய மனைவியும் மருத்துவமனையில் இருந்தார். இதனால் மாணவி மட்டும்  வீட்டில் தனியாக இருந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு அவருடைய தாயார் நீண்ட நேரமாக செல்போனுக்கு தொடர்பு கொண்டுள்ளார்.

ஆனால் அவர் போனை எடுக்காததால் அருகில் உள்ள அவருடைய சகோதரியிடம் கூறி வீட்டிற்கு சென்று பார்க்குமாறு கூறியுள்ளார். அதன்படி அவர் வீட்டிற்கு சென்று கதவை தட்டிய போது நித்ய ஜீவன் கதவை திறக்கவில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் அக்கம் பக்கத்தினர் உதவியோடு கதவை உடைத்து கொண்டு உள்ளே சென்று பார்த்தார். அப்போது மாணவி தூக்கில் பிணமாக தொங்கினார். இதை கேள்விப்பட்ட மாணவியின் பெற்றோர் மிகுந்த அதிர்ச்சிக்கு உள்ளாகினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக சேலையூர் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்த விசாரணை நடத்தி வரும் நிலையில் தந்தைக்கு உடல்நலம் சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதை நினைத்து மனவேதனையில் இப்படி ஒரு முடிவை எடுத்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் இருக்கிறதா என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.