அமெரிக்க நாட்டில் லாஸ் ஏஞ்சல்ஸ் பகுதியில் பிரபல நடிகை ராகுவல் வெல்ச் என்பவர் வசித்து வந்தார். இவர் கடந்த சில நாட்களாக வயோதிகத்தினால் மிகவும் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் அவரது வீட்டில் இன்று காலமானார். இவர் தொலைக்காட்சியில் வானிலை வாசிப்பாளராக வேலைக்கு சேர்ந்து பின் திரைப்படங்கள் பலவற்றில் நடித்து புகழ்பெற்றார்.

கடந்த 1960 ஆம் ஆண்டு பிகினி ஆடையில் தோற்றமளித்த முதல் பெண் இவர்தான். இதனையடுத்து 1973 ஆம் ஆண்டில் வெளியான தி த்ரீ மஸ்கடியர்ஸில் என்ற கதாபாத்திரத்திற்காக கோல்டன் குளோப் விருதை பெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் அவருடைய மறைவிற்கு ஹாலிவுட் பிரபலங்கள் தொடர்ந்து இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.