உலகம் முழுவதும் பொருளாதார நெருக்கடியின் காரணமாக பிரபல நிறுவனங்கள் தங்களது பணியாளர்களை பணி நீக்கம் செய்து வருகின்றது. அந்த வகையில் கூகுளின் தாய் நிறுவனமான ஆல்பர்ட் நிறுவனம் தங்களது மொத்த ஊழியர்களில் 12000 பேரை பணி நீக்கம் செய்யப் போவதாக கடந்த மாதம் அறிவித்திருந்தது.

இந்த நிலையில் கூகுள் நிறுவனத்தில் இந்திய கிளையில் பணியாற்றி வந்த ஊழியர்களில் 453 பேர் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். அவ்வாறு பணிநீக்கம் செய்யப்பட்ட ஊழியர்களுக்கு google இந்தியாவின் தலைவரான சஞ்சய் குப்தா கடந்த வியாழக்கிழமை நள்ளிரவில் மெயில் அனுப்பி உள்ளார். இந்த பணிநீக்கம் நடவடிக்கையை எதிர்த்து சுவிட்சர்லாந்தில் உள்ள google ஊழியர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர். அதோடு 250 ஊழியர்கள் google நிறுவனத்திற்கு வெளியே நின்று பதாகைகளை ஏந்தியபடி போராட்டத்திலும் ஈடுபட்டுள்ளனர்.