துருக்கியில் கடந்த வாரம் அதி பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தினால் அங்கு 42 ஆயிரம் பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். கான்கிரீட் குவியலுக்குள் தோண்ட தோண்ட பிணங்கள் தென்படுவதால் மீட்பு பணிகளில் பல்வேறு நாடுகளை சேர்ந்த மீட்பு படையினர் ஈடுபட்டுள்ளனர். அந்த வகையில் மெக்சிகோவில் இருந்து ராணுவ வீரர்களுடன் மீட்பு படையை சேர்ந்த 16 நாய்களும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில் புரோடியோ என்ற நாய் கடந்த வாரம் மீட்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது திடீரென உயிரிழந்துள்ளது. இந்த நாய் இரண்டு பேரை உயிருடன் மீட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து உயிரிழந்த புரோடியோ என்கிற நாய் விமான மூலம் மெக்சிகோ நாட்டு ராணுவ விமான தளத்திற்கு கொண்டு வரப்பட்டது. அங்கு குழுமியிருந்த ராணுவ வீரர்களும் புரோடியோவின் தந்தை தாய் உட்பட மீட்பு படையை சேர்ந்த ஐந்து நாய்களும் இறுதி மரியாதை சடங்கில் கலந்து கொண்டனர்.