இன்றைய காலக்கட்டத்தில் திருமண வைபவங்களைச் சிறப்பாக்க புதுப்புது யுக்திகளைக் கையாளுவது வாடிக்கையாகிவிட்டது. அந்த வகையில், மணமேடையில் மணமக்கள் இருவரும் ஒருவரையொருவர் ‘ஸ்பார்க்லர் கன்’ (Sparkle Gun) மூலம் நெருப்புப் பொறிகளை வீசித் தாக்கிக் கொண்ட வீடியோ இணையத்தில் தீயாய் பரவி வருகிறது.

சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் அந்த வீடியோவில், மணமேடையில் மாலை மாற்றும் சடங்கு நடைபெறுகிறது. அப்போது மணமகள் திடீரென கையில் இருந்த ஸ்பார்க்லர் கன் கருவியைச் செயல்படுத்தி, அதிலிருந்து வெளிவந்த நெருப்புப் பொறிகளை மணமகன் மீது திருப்பினார்.

இதைக் கண்டு அதிர்ச்சியடையாத மணமகன், சற்றும் யோசிக்காமல் பதிலுக்குத் தனது கையில் இருந்த கருவியைக் கொண்டு மணமகள் மீது நெருப்புப் பொறிகளைப் பாய்ச்சினார். இருவரும் ஒருவரையொருவர் தாக்கிக் கொண்டது, ஹாலிவுட் திரைப்படமான ‘ஸ்டார் வார்ஸ்’ போர்க்களக் காட்சி போலக் காட்சியளித்தது.

 

View this post on Instagram

 

A post shared by Neha Verma M Berma (@nehavermamberma)

நெருப்புப் பொறிகள் பட்டால் பட்டுப் புடவை மற்றும் திருமண உடைகள் எரிந்துவிடும் அபாயம் இருந்தும், மணமக்கள் அதைப் பொருட்படுத்தாமல் விளையாடினர். இதைக் கண்டு பதறிப்போன உறவினர்கள் மற்றும் விருந்தினர்கள், மேடைக்கே வந்து இருவரையும் கண்டித்தனர். அடுத்த சில நொடிகளிலேயே, அதுவரை சண்டையிட்டுக் கொண்டவர்கள் எதுவுமே நடக்காதது போல ஒருவருக்கொருவர் கை கோர்த்துக் கொண்டது அனைவரையும் வியப்பில் ஆழ்த்தியது.

இந்த வீடியோ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்ட சில நாட்களிலேயே சுமார் 3 கோடியே 84 லட்சம் பார்வைகளைக் கடந்து சாதனை படைத்துள்ளது. 5 லட்சத்திற்கும் அதிகமானோர் இந்த வீடியோவை ‘லைக்’ செய்துள்ளனர். இந்த வீடியோவிற்கு நெட்டிசன்கள் பல சுவாரசியமான கருத்துகளைப் பகிர்ந்து வருகின்றனர்:

இது திருமணமா அல்லது வெல்டிங் கடையா?” என ஒருவர் கிண்டலடித்துள்ளார். ஒவ்வொரு வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு என்பதை மணமகன் நிரூபித்துவிட்டார்” என மற்றொருவர் பதிவிட்டுள்ளார். இந்தியா என்பது கத்துக்குட்டிகளுக்கான இடமல்ல” எனச் சர்வதேச அளவில் இந்த வீடியோ பேசப்பட்டு வருகிறது. மேலும் சமூக வலைதளங்களில் பகிரப்படும் இத்தகைய ஆபத்தான திருமண ‘என்ட்ரி’ (Wedding Entry) முறைகள் குறித்துப் பலரும் கவலை தெரிவித்து வருகின்றனர்.