உத்திரபிரதேசத்தில் வாகன நெரிசல் மிகுந்த சாலையில் ஏராளமான வாகனங்கள் சென்று கொண்டிருந்தது. அப்போது பின்னால் பின்னால் வந்த காரின் ஓட்டுநர் தொடர்ந்து ஹாரன் அடித்தார். இதனால் முன்னால் நின்று கொண்டிருந்த காரில் இருந்து போக்குவரத்து காவலர் இறங்கி வந்தார்.

மேலும் கோபத்தில் ஹாரன் அடித்த ஓட்டுனரின் கன்னத்தில் ஓங்கி அறைந்தார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவியது. அந்த காவலர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏராளமானோர் கோரிக்கை விடுத்தனர். இந்நிலையில் தாக்குதலில் ஈடுபட்ட போக்குவரத்து காவலர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார்.