ஹாங்காங்கின் வாங் ஃபு சிகரம் அடுக்குமாடி குடியிருப்பு வளாகத்தில் ஏற்பட்ட கோர தீ விபத்தை அணைக்க, தீயணைப்பு வீரர்கள் கடந்த இரண்டரை நாட்களாக இடைவிடாமல் போராடி வருகின்றனர்.
இந்தத் துயரமான சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை தற்போது 94 ஆக அதிகரித்துள்ளது. விபத்தில் காயமடைந்த 76 பேரில், 28 பேரின் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. இதற்கிடையில், காணாமல் போனதாகத் தேடப்பட்டு வந்த 279 பேரில் சிலரை மீட்புப் படையினர் உயிருடன் மீட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தச் சம்பவம் குறித்து ஹாங்காங் நிர்வாகம் விரிவான விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.
