இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்திக் பாண்டியா தன்னுடைய மனைவியை விவாகரத்து செய்வதாக தற்போது அறிவித்துள்ளார். அதாவது இவர் செர்பியாவை சேர்ந்த நடாஷா என்ற மாடல் அழகியைக் கடந்த 4 வருடங்களுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்து கொண்ட நிலையில் இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறார். இந்நிலையில் 4 வருடங்களாக இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து நிலையில் தற்போது விவாகரத்து செய்வதாக ஹர்திக் பாண்டியா மற்றும் நடாஷா இருவரும் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.

மேலும் இருவரும் தங்களுக்குள் சரிப்பட்டு வராது என்பதை உணர்ந்து பரஸ்பர முடிவெடுத்து பிரிந்துள்ளதாக ஹர்திக் பாண்டியா கூறியுள்ளார். இவருடைய அறிவிப்பு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.