
மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரைச் சேர்ந்த ஒருவர், தனது மனைவியால் கடந்த 7 ஆண்டுகளாக தீராத மன வேதனையில் இருப்பதாக கூறியுள்ளார். தனது மனைவி, கோரி நகர் பகுதியில் வசிக்கும் ஒரு இளைஞருடன் தொடர்ந்து தகாத உறவில் ஈடுபட்டு வருவதாகவும், இதைத் தாங்கள் எதிர்த்ததாலேயே, மனைவி தன்னை “சோனம் கணவனை கொன்றது போல் உன்னையும் கொன்று விடுவேன்” என மிரட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து அவர் தனது மகனுடன் இணைந்து வீடியோவாக உருக்கமாக பேசி, சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். தற்போது அந்த வீடியோ வைரலாகி, பொதுமக்கள் மனதில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவர் கூறியதாவது, “விவாகரத்து கொடுக்கிறேன் என்று கூறினாலும் அதற்கு மனைவி ஒத்துக்கொள்ளவில்லை. அதற்கு பதிலாக, ‘நீ எங்க வேண்டுமானாலும் சொல்லி பாரு… நான் உன்னை தீர்த்து கட்டி விடுவேன்” என்று மனைவி மிரட்டியுள்ளார். மேலும், “முடிவில், நீங்களும் ‘சோனத்தின் கணவன் மாதிரிமாதிரி முடிஞ்சு போவீங்க” என மிரட்டினார் என அவர் கூறியுள்ளார். இதனால் நானும் என் மகன் உயிருக்கு அச்சுறுத்தலுடன் வாழ வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக வேதனையுடன் விளக்கியுள்ளார்.
இதேநேரம், தந்தையுடன் வீடியோவில் தோன்றிய சிறுவன், “நான் வீட்டில் இல்லாத நேரத்தில், ஒரு மாமா வந்து அம்மாவை வீட்டில் சந்திக்கிறார். இதைப் பார்த்து கேட்டதும், அம்மா என்னை கயிற்றால் அடிக்கிறார்” என கூறுகிறார். இந்த வீடியோவில் காணப்படும் சிறுவன் பயத்தோடு தன் தாயின் கொடுமைகளை விளக்குகிறார். இது இந்த குடும்பத்தில் நடக்கும் உண்மையை வெளிப்படுத்துகிறது. மேலும், கணவர் தனது வாழ்க்கைப் போராட்டத்தை விளக்கும் துண்டுப் பிரசுரங்களையும் அச்சிட்டு பொதுமக்களிடம் பகிர்ந்துள்ளார்.
இந்த சம்பவம் தொடர்பாக இந்தூர் ராவ் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்பதே கணவரின் குற்றச்சாட்டு. “எனக்கும் என் மகனுக்கும் ஏதாவது நடந்தால், அதற்குப் பொறுப்பாளிகள் என் மனைவியும், அவருடைய காதலனும் தான்” என அவர் வீடியோவில் உறுதியாக கூறியுள்ளார். மேலும் சமீப காலமாக கள்ளக்காதல் மோகத்தால் கணவன்மார்களை மனைவிகள் கொல்லும் சம்பவங்கள் குறித்த செய்திகள் அடிக்கடி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.