ஸ்மார்ட் போனில் டிவி நிகழ்ச்சிகளை பார்ப்பதற்கான சோதனைகளை மத்திய அரசு செய்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக மேம்பட்ட தொழில்நுட்பம் மூலம் டிவி சிக்னல்கள் நேரடியாக போன்களை சென்றடையும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு வருகின்றன. எதற்காக மொபைலில் ஒரு சிறப்பு டாங்கிலை இணைக்க வேண்டும். போன்களில் பிரத்யேக சிப்  பொருத்தினால் டாங்கில் இல்லாமலேயே டிவி சிக்னல்கள் போனை வந்தடையும்.