நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் வருடத்திற்கு 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. இந்தத் தொகை 2000 ரூபாய் வீதம் 3 தவணைகளாக விவசாயிகளின் வங்கி கணக்கில் நேரடியாக டெபாசிட் செய்யப்படுகிறது. இந்தத் திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு இதுவரை 12 தவணை வழங்கப்பட்டுள்ள நிலையில் 13வது தவணை எப்போது வரும் என விவசாயிகள் அனைவரும் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது பிஎம் கிஷான் திட்டத்தின் 13 ஆவது தவணை குறித்த முக்கிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.பி எம் கிசான் நிதி யோஜனா திட்டத்தில் கீழ் 13வது தவணைத் தொகையை விவசாயிகளின் கணக்கில் செலுத்த மத்திய அரசு தயாராகி வருகிறது.இந்த மாதம் 24 ஆம் தேதி விவசாயிகள் கணக்கில் 2000 ரூபாய் பணம் செலுத்தப்படும் என தகவல் வெளியாகி உள்ளது. EKYC பூர்த்தி செய்யப்பட்ட விவசாயிகளின் கணக்குகளில் மட்டுமே இந்த பணம் டெபாசிட் செய்யப்படும் எனவும் கூறப்படுகிறது.
