ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பென்சில், ஷார்ப்னர் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. 49-வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் டெல்லியில் நடைபெற்றது. இதில் மாநில நிதி அமைச்சர் கலந்து கொண்டார். இந்த கூட்டத்தில் பென்சில், ஷார்பர் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

திரவ நிலை வெல்லத்தை சில்லறையில் விற்பனை செய்வதற்கான வரி முற்றிலுமாக நீக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் பாக்கெட்டுகளில் விற்பனை செய்யப்படும் வெல்லப்பாகு மீதான ஜிஎஸ்டி 18 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் மாநிலங்களுக்கான ஜூன் மாத ஜிஎஸ்டி இழப்பீடு தொகையாக 16,982 கோடி விடுவிக்கப்படுவதாக தெரிவித்தார். இதில் தமிழகத்திற்கு மட்டும் 1201 கோடி ரூபாய் விடுவிக்கபடுவதாக தெரிவித்தார்.