இந்தியச் சாலைகளில் இரண்டு பேர் மட்டுமே பயணிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட ஒரு சாதாரண பஜாஜ் பிளாட்டினா (Bajaj Platina) பைக்கை, சில நபர்கள் தங்களது அசாத்திய மூளை மூலம் ஒரு மினி பஸ்ஸாகவே மாற்றி, ஒரே பைக் சீட்டில் 6 பேர் வரை ஆபத்தான முறையில் ஓவர்லோடிங் (Overloading) செய்து பயணம் செய்துள்ள வினோதமான வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வெளியாகி நெட்டிசன்களின் உச்சாந்தலையை சுற்ற வைத்து அசுர வேகத்தில் ட்ரெண்டாகி வருகிறது.

போக்குவரத்து விதிகளை முற்றிலும் காற்றில் பறக்கவிட்டுள்ள இந்த நபர்கள், தங்களது 100 சிசி பைக்கின் பின் இருக்கையில் ஒரு நீளமான தடிமனான மரப்பலகையை (மரப் பட்டை) குறுக்காகக் கட்டி ஒரு பெஞ்ச் போன்ற தற்காலிக செட்டப்பை உருவாக்கியுள்ளனர். அந்தப் பலகையின் மீது சற்றும் பயமின்றி 3 முதல் 4 பேர் தங்களது கால்களைத் தொங்கவிட்டுக்கொண்டு, கைகளில் பைகளுடன் சொகுசு காரில் செல்வது போல ஜாலியாக அமர்ந்து சவாரி செய்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Yaduvanshi Sumit Yadav (@kingsumityaduvansi)

இந்த வீடியோ இன்ஸ்டாகிராமில் வைரலானதைத் தொடர்ந்து கமெண்ட் செக்ஷனில் நெட்டிசன்கள் விதம் விதமாக மஜாவான கமெண்டுகளைத் தட்டிவிட்டு வருகின்றனர்; குறிப்பாக ஒரு பயனர், ‘பைக்கோட பேரு பிளாட்டினா இல்லை, அது ‘பலட்டி நா’ (அதாவது வண்டி கவுந்திடாதே!)’ என்று கலாய்த்துள்ளார்.

மேலும் சிலர் ‘தம்பி, போற வழியில பெரிய ஸ்பீடு பிரேக்கரோ அல்லது ரோட்டுப் பள்ளமோ வந்தா பலகை உடைஞ்சு மொத்தப் பட்டாளமும் தரைலதான் உருளணும்’ என்று நகைச்சுவையாக எச்சரித்துள்ளனர். இந்த வீடியோ பார்ப்பதற்கு எவ்வளவுதான் வேடிக்கையாகவும் சுவாரசியமாகவும் இருந்தாலும், சிறிய தடுமாற்றம் ஏற்பட்டாலும் ஒட்டுமொத்த உயிர்களுக்கே ஆபத்தாய் முடியும் என்பதால், இத்தகைய பொறுப்பற்ற செயல்களில் யாரும் ஈடுபடக் கூடாது எனப் போக்குவரத்து ஆர்வலர்கள் தங்களது கவலைகளைத் தெரிவித்து வருவதால், இந்த வீடியோ தற்பொழுது சோசியல் மீடியாவின் டாப் ட்ரெண்டிங் பொழுதுபோக்குச் செய்தியாக மாறியுள்ளது.