
இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் கேப்டன் தோனி விருந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றபோது, ஹூக்கா புகைக்கும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இந்த காட்சிகள் பழையதா அல்லது சமீபத்திய வீடியோவா என்று தெரியவில்லை. ஆனால் தோனி எப்போதும் தனது உடல் நலத்தில் மிகவும் அதிக அக்கறை கொண்ட நபர். 40 வயதில் தோனி தனது உடல்நலத்தில் எடுத்துகொள்ளும் அக்கறையை இக்கால இளைஞர்கள் யாரும் எடுத்துகொள்வதில்லை.
இந்நிலையில் இதனை பார்த்த ரசிகர்கள் பலரும் பல்வேறு விமர்சனங்களை வெளியிட்டு வருகின்றனர். சிலர் இதை ஏன் பெரிய விஷயமாக பேசுகிறீர்கள் என கூறுகின்றனர். சிலர் இது விளம்பர படமாக கூட இருக்கலாம் என கூறுகின்றனர். தோனி புகைப்பது ஒன்றும் புதியது இல்லை என ஒவ்வொருவரும் ஒவ்வொருவிதமாக கூறி வருகின்றனர். இதுபோன்ற ஹூக்கா விருந்து நிகழ்ச்சிகளை தோனி நடத்துவது வழக்கம் என்று ஆஸ்திரேலியாவின் முன்னாள் டி20 கேப்டன் ஜார்ஜ் பெய்லி கூறியுள்ளார்.
SMOKING= 07 Message is clear Thala dhoni for a reason 😁#MSDhoniXMcStan #DhoniXStan pic.twitter.com/EpumyNu9kg
— Radhika Chaudhary (@Radhika8057) January 6, 2024