இந்திய கிரிக்கெட் அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட டி20ஐ தொடரில் விளையாடவுள்ள  நிலையில் இந்திய அணியை பிசிசிஐ தேர்வு செய்துள்ளது. கேப்டன் ரோகித் சர்மா தலைமையிலான 16 பேர் கொண்ட இந்திய அணியை அறிவித்தது பிசிசிஐ. கேப்டன் ரோகித் சர்மா 14 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் டி20 இந்திய அணியை வழிநடத்துகிறார். 2024 உலகக் கோப்பையில் கேப்டன் ரோஹித் தலைமையில் இந்திய அணி களமிறங்குவது இதன்மூலம் உறுதியாகியுள்ளது. அதேபோல விராட் கோலியும் ஒரு வருடத்திற்கு பின் டி20 அணிக்கு  திரும்பியுள்ளார்..

ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி20 இந்திய அணி :

ரோஹித் சர்மா (கே), சுப்மன் கில், ஜெய்ஸ்வால், விராட் கோலி, திலக் வர்மா, ரின்கு சிங், ஜிதேஷ் சர்மா (வி.கீ.), சஞ்சு சாம்சன் (வி.கீ.), ஷிவம் துபே, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ரவி பிஷ்னோய், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங் , அவேஷ் கான், முகேஷ் குமார்.

2024 ஆம் ஆண்டு ஜூன் 1 ஆம் தேதி அமெரிக்கா மற்றும் மேற்கிந்தியத் தீவுகளில் தொடங்கும் டி20 உலகக் கோப்பைக்கு முன் இந்தியாவின் கடைசி டி20 தொடர் இதுவாகும். இந்தியா மற்றும் ஆப்கானிஸ்தான் இடையேயான முதல் டி20 போட்டி மொஹாலியின் பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானத்தில் ஜனவரி 11ஆம் தேதியும், இரண்டாவது டி20 போட்டி ஜனவரி 14ஆம் தேதி இந்தூரிலும், கடைசி போட்டி ஜனவரி 17ஆம் தேதி பெங்களூரு சின்னசாமி மைதானத்திலும் நடைபெற உள்ளது.