தமிழக முதலமைச்சர் ஜோசப் விஜய், பதவியேற்றது முதல் அரசியல் நாகரிகத்தைக் கடைபிடிக்கும் வகையில் பல்வேறு கட்சித் தலைவர்களைத் தொடர்ந்து சந்தித்து வருகிறார்.
நேற்று முன்னாள் முதல்வர் மு.க.ஸ்டாலின், வைகோ, அன்புமணி ராமதாஸ் மற்றும் சீமான் ஆகியோரை நேரில் சந்தித்து வாழ்த்துப் பெற்ற நிலையில், இன்று மற்றொரு முக்கிய நகர்வாக ஐயூஎம்எல் (IUML) தேசியத் தலைவர் காதர் மொகிதீனைச் சந்தித்துப் பேசினார். திமுக கூட்டணியில் அங்கம் வகிக்கும் ஐயூஎம்எல், தவெக அரசுக்குத் தனது ஆதரவை வழங்கியுள்ள நிலையில், இந்தச் சந்திப்பு மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.
த.வெ.க ஆட்சி அமைய ஆதரவளித்த ஐ.யூ.எம்.எல் தலைவர் காதர் மொகிதீனை சந்திக்க கட்சி அலுவலகம் சென்ற முதலமைச்சர் விஜய்.. கையை பிடித்து அழைத்துச்சென்ற நிர்வாகிகள்.!
➤மண்ணடி, சென்னை#CMVijay | #TVK | #IUML | #PolimerNews pic.twitter.com/vpARWuD8ro
— Polimer News (@polimernews) May 12, 2026
“>
முதலமைச்சர் விஜய்யை இன்முகத்துடன் வரவேற்ற காதர் மொகிதீன், அவரைப் பாசத்துடன் கட்டியணைத்து, பூங்கொத்து கொடுத்து தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார். ஆட்சியில் அமர்ந்த சில நாட்களிலேயே கூட்டணி மற்றும் எதிர்க்கட்சித் தலைவர்களைத் தேடிச் சென்று சந்திக்கும் விஜய்யின் இந்த ‘மிஷன்’, கோட்டை வட்டாரத்தில் ஒரு புதிய அரசியல் கலாச்சாரத்தை உருவாக்கியுள்ளது.
